Benching, Situationship...Gen-z கிட்ஸ் உலகில் வலம் வரும் இந்த வார்த்தைகள் பற்றி தெரியுமா?
ஜென்- z உலகில் வலம் வரும் புதுப்புது வார்த்தைகளின் அர்த்தம் பற்றி காணலாம்.
Gen-z வார்த்தைகள்
இன்றைய காலகட்டத்தில் காதல் மற்றும் காதலர்கள் மத்தியில் பலதரப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான காதல் இருந்து வருகிறது. அந்த வகையில்,
தற்போதைய நிலைமையை பொறுத்தவரை டேட்டிங் என்பது சாதாரணமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவே அது சம்பந்தமாக எக்கச்சக்கமான வார்த்தைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இணையத்தில் பலர் அவர்களது காதல் உணர்வை வெளிப்படுத்த பல வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ட்ரை டேட்டிங் (Dry Dating)
ட்ரை டேட்டிங் என்றால் மதுபானங்கள் எதுவும் அருந்தாமல் வழக்கமான முறையில் கேஷுவலாக ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது ட்ரை டேட்டிங் என்று அழைக்கப்படுகிறது.
அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட்டு, உண்மையான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதன் நோக்கமே ட்ரை டேட்டிங்.இது இன்றைய நவீன டேட்டிங்கின் முக்கியமான ஒரு அங்கமாக கருதப்படுகிறது.
சிச்சுவேஷன்ஷிப் (Situationship)
டேட்டிங் சென்ற இருவரில் ஒருவர் உணர்வுபூர்வமான நெருக்கம் இல்லாமல் உடல் ரீதியான நெருக்கத்தை ஒரு உறவில் தேடும் பொழுது அது சிச்சுவேஷன்ஷிப் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மாதிரியான ஒரு உறவு பொதுவாக மற்றொருவருக்கு ஒரு மாயையை உருவாக்கி, குழப்பத்தை ஏற்படுத்தி, இறுதியில் அவர் மனம் உடைந்து போக வழிவகுக்கிறது.
பென்ச்சிங் (Benching)
பென்ச்சிங் என்பது ஒருவர் தன்னுடைய ரொமான்ஸ் சம்பந்தப்பட்ட ஆசைகளை மிகவும் வெளிப்படையாக சொல்வது ஆகும். இவர்கள் பொதுவாக குறிப்பிட்ட ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து கொண்டு மற்ற நபர்களுடனும் உறவு வைத்துக் கொள்வார்கள்.
தற்போதைய ரிலேஷன்ஷிப் தோல்வியடையும் பட்சத்தில் மற்றொன்றை ஒரு பேக்கப் போல வைத்துக்கொள்வார்கள்.
பிரட் கிரம்பிங் (Breadcrumbing)
பிரட் கிரம்பிங்கில் ஒருவர் மற்றொருவரை வெறுமனே ஈர்ப்பதற்காகவே ஒரு சில விஷயங்களை செய்வார். ஆனால் அவரிடம் உண்மையாக நடந்து கொள்ள மாட்டார். இந்த மாதிரியான ஒரு நடத்தை எதிரே இருப்பவரை ஒரு குழப்பத்திற்கு ஆளாக்கி,
தான் முக்கியமில்லையோ என்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி விடும். சில சமயங்களில் தான் அவமானப்படுத்தப்பட்டு விட்டோமோ என்று கூட யோசிப்பார்கள்.
கோஸ்டிங் (Ghosting)
திடீரென்று எந்த ஒரு விளக்கமும் இல்லாமல் ஒருவர் உங்களிடம் அனைத்து விதமான தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வது கோஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நாளில் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
திடீரென்று பல வாரங்கள் அல்லது மாதங்கள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் காணாமல் போவார்கள். இது எதிரே உள்ள நபரை குழப்பத்திற்கு ஆளாக்கி, அவரை காயப்படுத்தும்.
ஜோம்பியிங் (Zombieing)
ஏற்கனவே உங்களை கோஸ்டிங் செய்த ஒருவர் மீண்டும் தோன்றி உங்களிடம் மீண்டும் இணைய வேண்டும் என்று கூறுவது ஜோம்பியிங் என்று அழைக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு வடிவமாக மாறலாம்.
அதாவது உங்களுக்கு மாறி மாறி நம்பிக்கை மற்றும் ஏமாற்றம் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது மாதிரியான நடத்தை கொண்டவர்களிடம் விலகி இருப்பது நல்லது.