ஆபாச படம் பார்ப்பது குற்றமில்லை...ஆனால்..!! சென்னை உயர்நீதிமன்றம் சொன்ன பாயிண்ட்

Tamil nadu Madras High Court
By Karthick Jan 13, 2024 02:00 AM GMT
Report

தற்போதைய இளம் தலைமுறையினர் ஆபாச படங்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கு 

சென்னை உயர் நீதிமன்றத்தில், தனது செல்போனில் சிறார்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி இளைஞர் ஒருவர் வழக்கு பதிவு செய்திருந்தார்.

watching-blue-films-is-not-a-crime-high-court 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என கருத்து தெரிவித்து, மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம் என சுட்டிக்காட்டினர்.

பொங்கலும் சிறையில் தான் - செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

பொங்கலும் சிறையில் தான் - செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!

அடிமை..

மேலும், 90s kids எப்படி மது, புகைக்கு அடிமையாகியிருந்தார்களோ, அதேபோல தற்போது 2K kids ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர் என வருத்தம் தெரிவித்துள்ள நீதிபதிகள், அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும் என்று தெரிவித்தனர்.

watching-blue-films-is-not-a-crime-high-court

பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்று தீர்ப்பில் குறிப்பிட்டனர்.