நீங்க நினைத்தது இல்லை..இந்தியாவில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் உள்ள மாநிலம் எது தெரியுமா?
இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில், ஆண் - பெண் இடையிலான மக்கள் தொகை விகிதங்கள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகின்றன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் பெண்கள் 48.46%ஆகவும், ஆண்கள் 51.54%ஆகவும் உள்ளனர். ஆனால், இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஆண்களைவிட அதிக பெண்கள் மக்கள் தொகை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக உள்ள ஒரே மாநிலம் கேரளாதான். இது குறித்து டைம்ஸ்நவ் இந்தி ஆய்வு ஒன்றை நடத்தியது அந்த ஆய்வு அறிக்கையின்படி, கேரள மாநிலத்தில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகம் உள்ளனர்.
எது தெரியுமா?
அதிக கல்வி அறிவு, சிறந்த சுகாதாரம் மற்றும் வேலை, பாலின சமத்துவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முற்போக்கான நல்ல விஷயங்களுக்காகக் கேரளா பல ஆண்டுகளாக இந்திய மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது. மேலும் கேரள மாநிலத்தில் 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் என்ற விகிதம் பதிவாகி உள்ளது.
ஆண்களும், பெண்களும் இணைந்துதான் ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறார்கள். இதனையடுத்து டாமன் & டையூ (618), தாத்ரா & நகர் ஹவேலி (774) மற்றும் சண்டிகர் (818) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மிகக் குறைந்த பாலின விகிதங்களைக் கொண்டுள்ளன.