இனி cellphone box-யை மறந்தும் தூக்கி போடாதீங்க.. இவ்வளவு பலன்கள் இருக்கு - இதை பாருங்க!
புதிய செல்ஃபோன் பாக்ஸில் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய செல்ஃபோன்
இன்றைய காலத்தில் செல்ஃபோன் என்பது அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகி உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் இல்லாமல் இருப்பதில்லை.அப்படி நாம் புதிய போன் ஒன்றை வாங்கும் போது செல்ஃபோன் பாக்ஸில் வைத்து பாதுகாப்புடன் வழங்குவார்கள்.
நம்மில் பலருக்கு புதிய போனை பார்த்தவுடன் பாக்ஸை தூக்கி எரிந்து விடுவார்கள். க்ஸை வேறு எதற்காவது பயன்படுத்துவண்டு.ஆனால் செல்ஃபோன் பாக்ஸை கொண்டு மறுவிற்பனை மதிப்பையும் திறனையும் அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா?இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செல்ஃபோனை வாங்குபவர்கள் பெரும்பாலும் அசல் பேக்கேஜிங் மூலம் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். ஏன் என்றால் அந்த போன் சரியாக வைக்கப்பட்டுள்ளது என்பதை பாக்ஸ் காட்டுகிறது. மேலும் செல்ஃபோன் பாக்ஸில் கியாரன்டி, வரிசை எண் மற்றும் IMEI எண் போன்ற முக்கியமான தகவல்கள் இடம் பெற்று இருக்கும்.
சுவாரஸ்ய தகவல்
இவை குறிப்பாக போன் சர்வீஸ் செய்யும் போது இந்தத் தகவல்கள் அனைத்தும் தேவைப்படும். அதுமட்டுமில்லாமல் பாக்ஸில் புதிய செல்ஃபோனை வைத்துக் கொடுப்பதன் தூசி, கீறல்கள் மற்றும் பிற சேதங்களிலிருந்து சாதனத்தைப் பாதுகாக்கிறது.
மேலும் செல்போன் திருடப்பட்டுவிட்டால் பாக்ஸில் உள்ள விவரத்தை வைத்து அறிந்து கொள்ள முடியும். மேலும் நமக்குத் தெரிந்தவர்களுக்கோ அல்லது நெருக்கமானவர்களுக்கு புதிய செல்ஃபோனை பாக்ஸுடன் பரிசாக வழங்கலாம். ஏனென்றால், அதை மிகவும் அழகாக்குகிறது