ஜெயக்குமார் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; மனைவியின் கேள்வி - மகனிடம் எடுக்கப்பட்ட டிஎன்ஏ!
ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயக்குமார் மறைவு
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர் எழுதியதாக 2 கடிதங்கள் சிக்கியது.
அதில் அவர் தற்கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், சம்பவ இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் தனது கணவரின் உடலே அல்ல என ஜெயக்குமாரின் மனைவி ஜெயந்தி மறுத்துள்ளார்.
DNA பரிசோதனை
மேலும், உடலில் இருக்கும் அடையாளங்கள் தனது கணவரின் உடல் அடையாளங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜெயக்குமாரின் மகனிடம் DNA பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு பேரிடமும் டிஎன்ஏ பரிசோதனை செய்து அதை ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் வெளிவந்துள்ள ஆதாரங்கள் வைத்து பார்க்கையில் இது கொலையாக இருக்கலாம் என்றே முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.