எங்க வீட்லயும் 26 CCTV கேமரா இருக்கு - அது எப்படி off ஆகும் - இத ஒதுக்க முடியாது - ஜெயக்குமார்
இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது வருமாறு,
இன்று தொழிலாளர்களுக்கு எதிரான ஆட்சி தான் நடைபெற்று வருகின்றது. தொழிலாளர் தினத்தை கொண்டாடக்கூடிய ஒரே தகுதி படைத்த கழகம் என்றால் அது அதிமுக தான். காவிரி நீர் குறித்து பேசிய அவர், நாங்கள் அப்போது மத்திய அரசு மீதே வழக்கு தொடர்ந்தோம்.
அந்த தைரியம் இவர்களுக்கு இல்லை. தண்ணீர் தாகமா? கோதுமை பீர் குடிங்க என்ற அளவில் தான் இருக்கிறார்கள். விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை. குடிநீர் பாசனம் இல்லை. ஆனால் ஒரு முதலமைச்சர் அது குறித்து நடவடிக்கை எடுக்காமல், அங்க போய் கோல்ப் விளையாடுகிறார்கள்.
சட்டஒழுங்கு எப்படி இருக்கு. கஞ்சா முதல் அனைத்து போதை சாதாரணமாகி விட்டது. அதனை நடவடிக்கை எடுக்கவேண்டுமா? இல்லையா? கூட்டணிக்காக டெல்லி போகிறார். தண்ணீர் விஷயத்திற்காக போகலாமே. இனிமேலாவது விழிப்புடன் இருந்து இதனை செய்யவேண்டும். ஆனால், அவர்கள் செய்யப்போவதில்லை.
ஏற்று கொள்ள முடியாது
CCTV கேமரா வாக்குப்பதிவு மையங்களில் அணைந்தது குறித்து பேசிய அவர், தேர்தல் கமிஷனுக்கு இது போதாத காலம் போல. வாக்காளர் பட்டியலில் சொதப்பல். Polling Registeration'இல் சொதப்பல். இப்போ 3-வது சொதப்பல்.
விஞ்ஞானம் முன்னேறியிருக்கும் இந்த நிலையில், ஒரு விழிப்புடன் இருந்திருக்க வேண்டாமா?
எங்க வீட்டில் கூட தான் 26 கேமரா இருக்கு. எங்கள் வீட்டில் வெயில் அடிக்கவில்லையா? இந்த காரணத்தை ஏற்று கொள்ள முடியாது. தேர்தல் கமிஷனின் ஒட்டுமொத்த குளறுபடி தான்.
குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்த கூடாது. clear'ஆக விஷயத்தை சொல்லாதது அவர்களது குத்தம் தான்.