மீண்டும் மீண்டுமா? ஈரோட்டில் 2-வது முறையாக மீண்டும் ஆப்பான CCTV கேமரா!!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளின் CCTV கேமராக்கள் அணைந்தது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதியும், 2-ஆம் கட்டமாக ஏப்ரல் 26-ஆம் தேதியும் முறையே 102 மற்றும் 88 தொகுதிகளிளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
தமிழகத்தில் வாக்கெடுப்பு முடிந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4-ஆம் தேதி தான் வெளிவரும் என்ற காரணத்தால், அடுத்த 1 மாதத்திற்கு இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, அங்கங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டுமா?
இதில், நீலகிரி மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையில் இருந்து CCTV கேமரா கிட்டத்தட்ட சுமார் 20 நிமிடங்கள் ஆப்பானது. இது பெரும் சர்ச்சையாக வெடித்து எதிர்வினைகளை எதிர்கொண்டது.
அதே நேரத்தில், அதிக வெப்பத்தின் காரணமாக, இந்த நிகழ்வு நடந்ததாக விளக்கமளிக்கப்பட்டது. இதே போன்ற சம்பவம் ஈரோடு பகுதியில் நடைபெற்றது. கேமரா ஆப்பானத்தை தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த சூழலில் தான், மீண்டும் ஈரோட்டில் கேமரா அணைக்கப்ட்டுள்ளது. சித்தோடு IRDD அரசு பொறியியல் கல்லூரியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு காலை 8 மணி முதல் சிசிடிவி இயங்காத நிலையில், வல்லுநர்களை பயன்படுத்தி மீண்டும் சிசிடிவி கேரமா செயல்பட தொடங்கியுள்ளது. ஈரோடு பகுதியில் தொடர்ந்து 2 முறை cctv கேமராக்கள் பழுதான செய்தி வேகமாக பரவி வருகின்றது.