மர்மமான முறையில் இறந்த ஜெயக்குமார்; சிக்கிய 2வது கடிதம் - பரபரப்பு தகவல்!

Indian National Congress Tirunelveli
By Sumathi May 05, 2024 09:52 AM GMT
Report

ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயக்குமார் மறைவு

நெல்லை, கரைச்சுத்து புதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(60). இவர் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வந்தார். மேலும், காண்டிராக்டர் தொழிலும் ஈடுபட்டு வந்தார்.

மர்மமான முறையில் இறந்த ஜெயக்குமார்; சிக்கிய 2வது கடிதம் - பரபரப்பு தகவல்! | Congress Jayakumars 2Nd Letter Explanation

இவர் தோட்டம் ஒன்றில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தொடர்ந்து, அவரது கட்சி அலுவலகத்தில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதன் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயக்குமார் தனசிங் எழுதிய மற்றொரு கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், “எனக்கு 16 நபர்கள் லட்சக்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்டவர்களை குடும்பத்தினர் யாரும் பழிவாக வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்.

காங்கிரஸ் தலைவர் உடல் ஒப்படைப்பு; பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பகீர் பின்னணி!

காங்கிரஸ் தலைவர் உடல் ஒப்படைப்பு; பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு - பகீர் பின்னணி!

சிக்கிய 2வது கடிதம்

மகளின் திருமணத்தை அனைவரும் சிறப்பாக நடத்திக் கொடுத்தீர்கள்; என் அன்பு உங்கள் மீது எப்போதும் உண்டு. மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொண்டால் என்னை மன்னிக்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த 4 பக்க கடிதத்தை அன்பு மருமகன் ஜெயபாலுக்கு எழுதியுள்ளார்.

congress jayakumar death

இவரது உடலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறை, "மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகியின் கடிதம் தொடர்பாக கடிதத்தில் பெயர்கள் உள்ள நபர்களிடம் விசாரணைநடத்தி வருகிறோம்.

மே 3-ந்தேதி ஜெயக்குமாரின் மகன் புகார் தரும்போதுதான் எஸ்.பி., மருமகனுக்கு எழுதிய 2 கடிதங்கள் தரப்பட்டன. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா, தற்கொலையா என்பது தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளனர்.