அதிமுக- தவெக கூட்டணி? இந்த கண்டிஷனுக்கு ஒகேவா - சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்!
அதிமுக- தவெக கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் விளக்கமளித்துள்ளார்.
அதிமுக- தவெக
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்களை கொடுத்தார்.

அதில் திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி பாலத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும், திருமங்கலத்தில் நகர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், திருமங்கலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.
உதயகுமார் பதில்
திருமங்கலம் ரயில்வே மேம்பால பகுதிதில் தேவையான அணுகு சாலை அமைக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

அதிமுகவிற்கு ஆதரவளிக்கிற கட்சிகள் எந்த மூலையில் இருந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக தயாராக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ! அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் சிவப்பு கம்பளம் குறித்து வரவேற்கிறோம்.
தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க உள்ளார். . பொதுசெயலாளர் எடப்பாடி எடுக்கும் முடிவு முடிவு இறுதியானது அதிகாரபூர்வமானது. மற்றவர்கள் கூறுவதை பார்க்கலாம், ரசிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25
அமெரிக்காவிற்கு பேரிடி : ஹோர்முஸ் நீரிணையில் ஆளில்லா நீர்மூழ்கி உளவு கப்பலை கைப்பற்றியது ஈரான் IBC Tamil
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் :மகிந்தவை தேடிச் சென்று சந்தித்த சீனாவின் புதிய தூதுவர் : வழங்கப்பட்ட அன்பளிப்பு IBC Tamil