பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு!
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
கடலூர்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஆன்மிக தலைவரும் சமூக சீர்திருத்தவாதியுமான சுவாமி ஏ.எஸ். சகஜானந்தரின் 135 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசியவர்,’’ நமது பாரத கலாசாரத்தையும் அடையாளத்தையும் அழிக்க நமது சமூகத்தின் மீது இரண்டு விரோத வெளிப்புற சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவற்றில் ஒன்று சித்தாந்தம், மற்றொன்று இறையியல். இந்த சக்திகளுக்கு முக்கிய பின்தங்கிய சமூகம் இரையாகியது என்று கூறினார்.
தொடர்ந்து பேசியவர்,’’நமது தலித் சகோதர, சகோதரிகள் அனுபவிக்கும் அனைத்து வகையான சமூக பாகுபாடுகள் மற்றும் அட்டூழியங்களை முறியடிக்க, சுவாமி சகஜானந்தரின் போதனைகளைப் பின்பற்றுவது அவசியம் எனத் தெரிவித்தார்.
ஆளுநர் ரவி
மேலும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்-அமைச்சராக வேண்டும் என்று கூறிய அவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் ஊர்த் தலைவர் கூட ஆகமுடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் சில இடங்களில் செருப்பு போட்டுக் கூட நடக்க முடியாத சூழல் இருந்து வருகிறது என்று தெரிவித்தார். பட்டியலின மக்கள் கொல்லப்பட்ட கீழ்வெண்மணியில் இதுவரை மக்களுக்கு நல்ல வீடுகள் இல்லை என்று கூறினார்.