பொன்முடி சிறை தண்டனை நிறுத்திவைப்பு - மீண்டும் எம்எல்ஏ ஆகிறாரா?
பொன்முடியின் சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பொன்முடி
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கடந்த 2006 - 2011 வரை திமுக ஆட்சியில் இதே துறையில் அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக,
கடந்த 2011-ல்பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விழுப்புரம் ஊழல் தடு்ப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ல் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது.
தண்டனை நிறுத்திவைப்பு
அதனைத் தொடர்ந்து, 2017-ல்சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்தது. அதன் விசாரணையில், , இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது அமைச்சர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை இழந்தார்.
அதன்பின் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், அந்த வழக்கு விசாரணையில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து அவர் எம்எல்ஏ பதவியை மீட்டுத்தரக் கோரி சட்டப்பேரவை செயலகத்தை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.