முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அமைச்சர் பொன்முடி சந்திப்பு!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் பொன்முடி சந்தித்துள்ளார்.
அமலாக்கத்துறை சந்திப்பு
2006 - 2011 ம் ஆண்டு அமைச்சராக இருந்த பொன்முடி, செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும்,இதன் மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாகவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.
முதலமைச்சருடன் சந்திப்பு
தொடர்ந்து, அவருக்கு தொடர்புடைய ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அவரது மகன் கெளதம சிகாமணியிடமும் 13 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
அதனையடுத்து நேற்றும் இருவரிடமும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணைக்குப்பின் வீடு திரும்பினர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்.
இதில், அமலாக்கத்துறை விசாரணை தொடர்பாக விளக்கம் அளித்ததாகவும், சட்ட ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.