திமுக கூட்டணியில் காங்கிரஸ் களமிறங்கும் கிருஷ்ணகிரி - தீவிர கள பணியில் மதியழகன் எம்.எல்.ஏ.
திமுக, கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு - புதுச்சேரி பத்து இடங்களை ஒதுக்கியுள்ளது.
கிருஷ்ணகிரி தொகுதி
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்ததை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை அறிவித்துள்ளார்.
முன்னதாக, திமுக கூட்டணி கட்சி தொகுதிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்யவேண்டும். எந்த வகையிலும் பகுதி வாரியாக வாக்குகள் குறைய கூடாது.
அப்படி குறைந்தால் அதற்கு அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் திமுக மாவட்ட செயலாளர்களிடையே நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
மதியழகன் வீயூகம்
இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், காங்கிரஸ் தவிர அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீண்டும் செல்வகுமார் போட்டியிடுவார் என உறுதியாக தெரிகிறது.
இதனையடுத்து, கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலக பந்தல் அமைப்பதற்கான பணிகளை, மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் துவங்கி வைத்துள்ளார். அதே போல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் ( WAR ROOM ) திறக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்து வைத்து தேர்தல் வீயூக வெற்றி குறித்து பல கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
இந்நிகழ்வில், மாநில சட்டத்துறை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ்ராஜா கலந்து கொண்டனர்.