கூட்டணிக்கு யாரும் அழைக்கல..எதனால் இந்த இழுபறி? தேமுதிக தகவல்!
தேர்தல் கூட்டணி தொடர்பாக தங்களை யாரும் அழைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டணி
மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை மேற்கொண்டுள்ளன.
அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. தொடர்ந்து, தேமுதிக 14 லோக் சபா இடங்கள் ஒரு ராஜ்ய சபா இடம் கொடுக்கும் கட்சியுடன் தான் கூட்டணி என கூறியது.
தேமுதிக தகவல்
ஆனால் அதிமுகவும் பாஜகவும் அதனை ஏற்கவில்லை என்றும், இதனால் தேமுதிக இறங்கி வந்துள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ''நாங்கள் இதுவரைக்கும் யாருடனும் பேச்சு நடத்தவில்லை. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களை யாரும் அழைக்கவும் இல்லை” என தேமுதிக துணைப் பொதுச்செயலர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.