அதிமுக கூட்டணியில் தேமுதிக ..? முடிவெடுப்பதாரா பிரேமலதா..?
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெரும் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.
தேமுதிக
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 மாத காலம் கூட இல்லாத சூழலில் இன்னும் தேமுதிக எந்த கூட்டணியில் இடம்பெற போகிறது என்ற தகவல் ஏதும் இல்லை.

அண்மையில் பேட்டியளித்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் தேர்தலில் 14 தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியும் அளிக்கும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என கூறி இருந்தார்.
இந்நிலையில் தேமுதிக, - அதிமுக பேச்சுவார்த்தையில் நடத்தப்பட்ட போது, 3 மக்களவை தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தரப்பில் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜக தரப்பில் ராஜ்ய சபா கொடுக்க முடியாது என்றும் 4 மக்களவை தொகுதி கொடுப்பதாக பேசப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தான் கட்சி இடம்பெறவேண்டும் என வலியுறுத்தியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால், இதில் அதிகாரப்பூரவ எந்த தகவலும் இல்லை.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
இந்திய தலைநகரை உலுக்கிய கார் வெடிப்பு..! நேரில் கண்டவரின் வாக்குமூலம்: அதிர்ச்சியில் மோடி அரசு IBC Tamil