தனியாக களம் காண நிர்வாகிகள் விருப்பம்...ஆனால்..! கூட்டணி பற்றி அதிரடியாக சொன்ன பிரேமலதா..!!
வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது.
தேர்தல்
இன்னும் ஒரு மாத்திற்குள் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தால், கட்சிகள் கூட்டணி குறித்தும் தேர்தல் நடவடிக்கைகளிலும் மும்முரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் முதல்முறையாக விஜயகாந்த் இல்லாமல் தேர்தலில் சந்திக்கிறது தேமுதிக. ஆனால், இன்னும் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறுவது என்ற முடிவை எடுக்கவில்லை. கடந்த தேர்தலில் தேமுதிக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், இம்முறை கூட்டணிக்காக பிரேமலதா குறைந்தது 4 மக்களவை இடங்களும், 1 மாநிலங்களவை இடம் கேட்பதாக சில தினங்கள் முன்பு தகவல் வெளியாகின. இந்த சூழலில் தான் இன்று தேமுதிகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் கட்சி நிர்வாகிகள், அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக நீடிக்கவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணிக்கு குறித்து பேசுகையில் 14 மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் என்ற முடிவில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்த பிரேமலதா, அவ்வாறு இல்லையென்றால் தனித்து போட்டியிடும் முடிவிலும் தாங்கள் இருப்பதாக தெரிவித்தார்.