பாஜக கூட்டணியில் தேமுதிக...?? அவசர அவசரமாக தேமுதிக வெளியிட்ட அறிக்கை!!
வரும் நாடாளுமன்ற தேர்தல் காலம் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் கூட்டணி குறித்தான பேச்சுக்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன.
மூன்று கூட்டணிகள்
திமுக - இந்தியா கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி என தற்போது தமிழகத்தில் 3 கூட்டணிகள் உருவாகியுள்ளன. இதில் மேலும், நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டி என்ற கொள்கையை கடைபிடித்து வருகின்றது.
தற்போது, மற்ற பிரதான கட்சிகள் அதாவது - பாமக, தேமுதிக போன்றவை எந்த கூட்டணியில் இடம்பெறும் என்பது பெரும் விவாத பொருளாக இருந்து வருகின்றது. அதிமுக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த நினைக்கும் சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொண்டாலும், பாஜகவிற்கு சில கட்சிகள் சாய வாய்ப்புள்ளது.
பாஜகவுடன் தேமுதிக..?
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதன் தொடர்ந்து விஜயகாந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் அண்ணாமலை அவர்களை சந்திக்கவுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிடும் (தினமலர்) பத்திரிக்கை கண்டிக்கிறேன். இதுபோன்ற செய்தியை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூட்டணி குறித்து தலைமை கழகம் அறிவிக்கும் அதுவரையிலும் இதுபோன்ற வதந்திகளை பரப்பும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.