திமுகவுடன் கூட்டணியா? அதிமுக பேச்சுவார்த்தை என்னவானது - பதிலளித்த தேமுதிக
தேமுதிக வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெரும் என்ற செய்தி இன்னும் உறுதிப்படவில்லை.
தேமுதிக
வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 14 தொகுதிகளை தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், தேமுதிகவை கூட்டணிக்கு அழைக்க பாஜக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அதே நேரத்தில் அதிமுகாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அதிமுக 14 இடங்களை அளிக்க மறுத்துவிட்டதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளிவந்து கொண்டே இருந்தன. இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத,
அதிகாரபூர்வமற்ற தகவல்கள் என்ற போதிலும், தேமுதிக 14 இடங்களை கேட்பதே கூட்டணிக்கு சிக்கலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணியில்
இந்நிலையில், தான் இன்று தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் பேசிய தேமுதிகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், துணை செயலாளரான பார்த்தசாரதி தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது இது வரை தங்கள் கூட்டணி உறுதியாகவில்லை என்று கூறி, தேவைப்பட்டால் தாங்கள் அதிமுக அல்ல திமுக கூட்டணியில் கூட இடம்பெறுவோம் என்று தெரிவித்தார்.
மேலும், 14 தொகுதிகள் என்பது மாவட்ட செயலாளர்கள் விருப்பமே என்று குறிப்பிட்ட அவர், அது கூட்டணி தர்மத்திற்காக அது முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.