Diwali Special: கடைசி நேரத்தில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் - சிம்பிள் ஐடியாஸ்!

Diwali Festival
By Sumathi Oct 22, 2022 12:32 PM GMT
Report

தீபாவளி நெருங்கும் நிலையில், நம் வீட்டை எளிதாக எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் என பார்ப்போம்...

தீபாவளி என்றாலே அனைவருக்கும் மனதில் ஒருவித ஆர்பரிக்கும் கொண்டாட்டம். தீபாவளியின் போது அலங்காரம் செய்வது என்பது ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வருகிறது. தீபாவளியில் வீட்டை டிரெண்டியாக அலங்கரிக்க இது பெஸ்ட் சாய்ஸ்..

ரங்கோலி:

Diwali Special: கடைசி நேரத்தில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் - சிம்பிள் ஐடியாஸ்! | Diwali Special How To Decorate The House

வண்ணமயமான ரங்கோலி இல்லாமல் எந்த தீபாவளியும் நிறைவடையாது. ஸ்டென்சில் பிரேம் அல்லது ஸ்டிக்கரைப் பெறுவதற்குப் பதிலாக நீங்களே ஒன்றை உருவாக்கலாம். இது உண்மையில் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணியாகும், ஆனால் மனநிலையை மேம்படுத்துகிறது. ரங்கோலியின் வண்ணங்கள் உங்கள் இதயத்தையும் நிரப்பட்டும்.

மின்னும் தோரணைகள் :

அமசான் போன்ற ஆன்லைன் சந்தைகளிலும் இந்த தோரணைகள் விற்கப்படுகின்றன. அதில் கற்கள் பதித்த அல்லது செயற்கை மலர்கள் கோர்க்கப்பட்ட தோரணைகள் வீட்டின் முற்றம், நுழைவுக் கதவுகளில் மாட்டினால் அழகாக இருக்கும்.

Diwali Special: கடைசி நேரத்தில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் - சிம்பிள் ஐடியாஸ்! | Diwali Special How To Decorate The House

சீரியல் லைட்டுகளில் நீங்களே வீட்டில் காகித கப்களில் துளையிட்டு ஒவ்வொரு லைட்டுகளிலும் மாட்டிவிட்டால் அது இன்னும் கூடுதல் அழகைத் தரும்.

மெழுகு வர்த்திகள் :

தற்போது கேண்டில்கள் பலவகையான டிசைன்களில் கிடைக்கின்றன . அவற்றை வாங்கி ரங்கோலிகளில் வைப்பது, வெளியே சுற்றிலும் வைத்து வீட்டையே விளக்குகளால் வெளிச்சமாக்கலாம்.

Diwali Special: கடைசி நேரத்தில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் - சிம்பிள் ஐடியாஸ்! | Diwali Special How To Decorate The House

பூக்கள்:

இத்தனை அலங்காரங்களுக்கு நடுவே வாசனை பரப்பும் பூக்கள் இருந்தால்தான் கூடுதல் அழகு. எனவே நறுமணம் கமழும் பூக்களை வாசல், வீட்டின் சுவர்களை சுற்றிலும் கட்டித் தொங்க விடுங்கள். வீடே திருவிழா தோற்றத்தில் கலகலக்கும்.  

Diwali Special: கடைசி நேரத்தில் வீட்டை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம் - சிம்பிள் ஐடியாஸ்! | Diwali Special How To Decorate The House