சூடு பிடித்தது தீபாவளி விற்பனை; புத்தாடைகளை வாங்க குவிந்த மக்கள்

Diwali
By Thahir Oct 21, 2022 12:43 PM GMT
Report

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் மக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விற்பனை சூடுபிடித்தது 

தித்திக்கும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளது.இதையடுத்து புத்தாடைகளை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் உள்ள தி.நகர் பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்து வருகின்றனர்.

சூடு பிடித்தது தீபாவளி விற்பனை; புத்தாடைகளை வாங்க குவிந்த மக்கள் | Diwali Sales Are Hot

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள துணிக்கடைகளில் புத்தாடைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதே போல மதுரை விளக்குத்துான் பகுதியில் ஏராளமான மக்கள் புத்தாடைகளை வாங்க குவிந்து வருகின்றனர்.

திருநெல்வேலி, கோயம்புத்துார், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புத்தாடைகளை வாங்கி வருகின்றனர்.