சீமான், விஜய்யை திட்டிட்டா மட்டும் திமுக போஸ்டிங் தராது - சத்யராஜ் மகள் திவ்யாவை சாடிய பிரபலம்!
சத்யராஜ் மகள் திவ்யாவுக்கு திமுகவில் பதவி தர மாட்டார்கள் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
திவ்யா சத்யராஜ்
சத்யராஜ் மகள் திவ்யா குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில், "பொதுவாக, பிரபலமானவர்களை திமுகவில் அதிகம் சேர்க்க மாட்டார்கள். அதிலும் சினிமாக்கார குடும்பத்தில் பெரும்பாலும் சேர்க்க மாட்டார்கள்.
நடிகர், நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டித்தான் வைத்திருக்கிறது திமுக. எம்பி தேர்தலின்போது, தேசிய கட்சியிலிருந்து அழைப்பு வந்தது? சீட் தருவதாக சொன்னார்கள் என்றார். ஆனால், அந்த தேசிய கட்சி மறுப்பு தெரிவித்துவிட்டது.
திமுக பாரம்பரியமா?
இப்போது திமுகவில் வந்து சேர்ந்திருக்கிறார் திவ்யா சீமானை ஏன் திவ்யா விமர்சனம் செய்யணும்? உங்களுக்கு என்ன துரோகம் செய்தார் சீமான்? தமிழ் தேசியம் என்று சொன்னால் தப்பா? சீமானை திட்டுவதாலோ, விஜய்யை திட்டுவதாலோ, பெரிய பதவியை திமுக திவ்யாவுக்கு தரப்போவதில்லை என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்க என்ன திமுக பாரம்பரியமா? உங்க அப்பா திமுகவா? மேயராக, வானதிக்கு எதிராக சட்டசபையில் போட்டியிடணும்னு ஆசைப்பட்டால் எப்படி? பதவிக்காக திமுகவில் வாய்ப்பு தர மாட்டார்கள்.
அதிலும், இப்படியொரு பேராசையை நிரூபித்துவிட்ட திவ்யாவுக்கு பதவி தர மாட்டார்கள். உழைப்புக்கேற்ற மரியாதை கிடைத்தால் அதை திவ்யா பெற்றுக் கொள்ளட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.