பெரியாரை மண் என சொன்ன சீமான் - உதயநிதி கொடுத்த நச் ரியாக்‌ஷன்!

Udhayanidhi Stalin Periyar E. V. Ramasamy Chennai Seeman
By Sumathi Feb 05, 2025 03:28 AM GMT
Report

பெரியார் குறித்த சீமான் விமர்சனத்துக்கு உதயநிதி பதிலளித்துள்ளார்.

சீமான் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

seeman - udhayanidhi

இந்நிலையில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்ற என்.சி.சி மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு என்.சி.சி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், என்.சி.சி மாணவர்கள் டெல்லி செல்லும்போது, 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்து சோர்வடைகிறார்கள்.

4 ஆண்டுகளில் இது 3வது முறை - பள்ளி, கல்லூரி அனைத்திற்கும் விடுமுறை!

4 ஆண்டுகளில் இது 3வது முறை - பள்ளி, கல்லூரி அனைத்திற்கும் விடுமுறை!

உதயநிதி பதில்

அதனால், விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று என்.சி.சி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு அவர்களை விமானத்தில் பயணிக்க வைப்பதற்காக 28 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து டெல்லி அனுப்பி வைத்தோம்.

பெரியாரை மண் என சொன்ன சீமான் - உதயநிதி கொடுத்த நச் ரியாக்‌ஷன்! | Udhayanidhi Stalin About Seeman Criticize Periyar

அதற்கு அவர்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்கள். டெல்லியில் அவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார். தொடர்ந்து பெரியார் குறித்த சீமான் விமர்சனம் தொடர்பான கெஏள்விக்கு, நான் அவருக்கு பதில் சொல்வதே கிடையாது என ஒரே வார்த்தையில் பதிலளித்தார்.