சகோதரனுடன் கைக்கோர்த்த சசிகலா! வலுக்குமா பலம்?
அதிமுகவில் தலைமை குறித்த குழப்பம் நீடித்து வரும் நிலையில் திவாகரன் தனது அண்ணா திராவிட கழகத்தை சசிகலாவுடன் இணைத்துள்ளார்.
இணைக்கப்போவதாக அறிவிப்பு
சின்னம்மா அவர்களின் சீரிய தலைமையில் தாய் கழகமான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வரும் 12-ந் தேதி செவ்வாய்கிழமை காலை 11 மணிக் தஞ்சாவூரில் அமைந்துள்ள
தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என்று கடந்த 10-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி இன்று தஞ்சையில் இணைப்பு விழா நடைபெற்றது.
இணைப்பு விழா
2018-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நிக்கப்பட்ட பிறகு அண்ணா திராவிடர் கழகத்தை திவாகரன் தொடங்கினார்.
இன்று தஞ்சையில் நடந்த இணைப்பு விழாவில் சசிகலாவின் கட்சியுடன், திவாகரன் அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். சசிகலாவுக்கு வரவேற்பு மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளித்தப்பின்,
திவாகரன் கண்னீர் சிந்திய வண்ணம் மேடையில் பேசினார்.
சசிகலாவுக்கு உதவி
சசிகலாவுக்கு அனைவரும் உதவி செய்யக்கூடிய கட்டாயத்தில் இருப்பதாகவும், தமிழகம் முழுவதிலிருந்து 2500 க்கும் மேற்பட்ட இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் சசிகலாவோடு இணைய உள்ளனர் என்று திவாகரன் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம் - கணக்குகளை யாரிடமும் ஒப்படைக்கக் கூடாது!