தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ஆட்சியர்களுக்கு அலர்ட்!
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்
தமிழகம், கேரளா, கர்நாடக, மகாராஷ்டிரா,அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 500- ஐ தாண்டிவிட்டது.
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைககள் மற்றும்
கொரோனா பரவல்
மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தலா 50 முதல் 100 படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளோருக்கு
பாரசிட்டமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கதொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும், பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவை இவர்கள் பரிசோதித்து வர வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - பெருகும் ஆதரவு..!