அரசு பேருந்தில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் - அதிர்ந்த பயணிகள்!
இருக்கைக்காக 2 பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தகராறு
பீகாரில் இருந்து கலபுரகி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்தில் பெண்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது இருக்கை பிடிப்பதில் இளம்பெண் ஒருவருக்கும், வயதான பெண் ஒருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு கைகலப்பாக மாறியதால் பெண்கள் ஒருவரும் குடுமியை பிடித்து சண்டையிட்டனர். மேலும், ஒருவரையொருவர் செருப்பாலும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
பயணிகள் அதிர்ச்சி
ஒருகட்டத்தில் இளம்பெண்ணின் ஆடையை அந்த வயதான பெண் பிடித்து இழுத்ததாக தெரிகிறது. இந்த சண்டையை பார்த்து பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்களை பிரித்து இழுத்து சென்று சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.