காஃபி, டீ குடிக்கும் போது பிஸ்கட் சாப்பிடுறீங்களா? உங்களுக்கான தகவல்தான் இது!
தேநீர் குடிப்பதில் சில பக்க விளைவுகளும் உள்ளது.
தேநீருடன் பிஸ்கட்
தேநீர் குடிக்கும் போது அதனுடன் சில நொறுக்குத்தீனிகளை சேர்த்து சாப்பிடுவது பலரின் வழக்கமாக உள்ளது. இதில் பெரும்பாலும் முதலிடத்தில் இருப்பது பிஸ்கட்தான். இதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
தேநீருடன் அதனை சாப்பிடும் போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கிறது. இது டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எடை அதிகரிப்பு மற்றும் உடனடி ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
பக்க விளைவுகள்
இதனால் சோர்வாக உணரலாம். பெரும்பாலான பிஸ்கட்களில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் உள்ளன. இது உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. இத்தகைய கொழுப்புகள் உடலில் நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்து, கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்துகின்றன.
கார்போஹைட்ரேட் நிறைந்த பிஸ்கட்களுடன் தேநீர் இணையும் போது, அமிலத்தன்மை, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை மோசமாக்கலாம்.
பிஸ்கட் இயற்கையாகவே பற்களில் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையதால், இது தேநீரின் சர்க்கையுடன் இணையும் போது பல் சிதைவு மற்றும் பிற பல் பிரச்சினைகளின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது.