படுத்த படுக்கையில் பிரபல இயக்குநரின் மனைவி - நெஞ்சை உலுக்கும் தகவல்!

Tamil Cinema
By Sumathi Oct 27, 2023 10:01 AM GMT
Report

இயக்குநர் விக்ரமன் மனைவி உடல்நிலை குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் விக்ரமன்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். ’பூவே உனக்காக’, ‘சூர்யவம்சம்’, ‘வானத்தைப்போல’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். அவரது மனைவி ஜெயப்பிரியா.

director vikraman wife

குச்சிபுடி கலைஞரான இவர் தமிழ் நாட்டில் 4000 மேடைகளில் நடனம் ஆடியுள்ளார். மருத்துவ குளறுபடியால் கடந்த 5 வருடங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். தற்போது கிட்னி பிரச்சணையால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நோய் பாதிப்பில் மனைவி

இதனால், தன்னுடைய சொத்துக்களை விற்று விக்ரமன் மனைவியை கவனித்து வருகிறார். மேலும், பல வருடங்களாக திரைப்படம் இயக்காமல் இருந்து வருகிறார். எந்தவித நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ளவதில்லை. இந்நிலையில், திரையுலகம் இவரது குடும்பத்திற்கு பெரிதாக உதவவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

jayapriya vikraman

இதுகுறித்து பேசியுள்ள அவரது மனைவி, எனக்கு முதுகு வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். சிடி ஸ்கேன், ஸ்கேன் என பரிசோதனை செய்துவிட்டு, இது கேன்சர் போல இருக்கு இதனால், பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். ஆப்ரேஷன் மூன்றரை மணி நேரம் நடந்தது.

‘என்னை கருணை கொலை செய்து விடுங்கள் ’ - மனைவியிடம் கூறிய ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ‘

‘என்னை கருணை கொலை செய்து விடுங்கள் ’ - மனைவியிடம் கூறிய ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ‘

பத்து நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை. வீட்டில் என்னுடன் எப்போதும் இரண்டு நர்சுகள் இருக்கிறார்கள், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை யூரியன் பேக் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இப்போதும் சூர்யவம்சம்2 திரைப்படத்தை எடுக்கும்படி கேட்கிறார்கள்.

ஆனால், என்னை இந்த நிலைமையில் விட்டுவிட்டு போகமாட்டேன் என்கிறார். நானும் அழுதால் அவர் கதறிவிடுவார் என்று 5 வருஷமாக தைரியமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.