‘என்னை கருணை கொலை செய்து விடுங்கள் ’ - மனைவியிடம் கூறிய ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் ‘
என் கருணை கொலை செய்து விடுங்கள்... என்று மனைவியிடம் ‘வெண்ணிலா கபடி குழு’ பட நடிகர் கூறியதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘வெண்ணிலா கபடி குழு’ படம்
சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம்தான் ‘வெண்ணிலா கபடி குழு’. இப்படத்தில் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி, ஹரி வைரவன் உட்பட பல நடிகர்கள் நடித்தனர்.
இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் ‘குள்ளநரி கூட்டம்’, ‘நான் மகான் அல்ல’ போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, நடிகர் ஹரி வைரவன் உடல்நிலை கவலைக்கிடமாக தகவல் வெளியாகியுள்ளது.
என் கருணை கொலை செய்து விடுங்கள்...
சமீபத்தில் ஒரு சேனலுக்கு ஹரி வைரவனும், அவரது மனைவியும் பேட்டி கொடுத்தனர். அந்தப் பேட்டியில் அவரது மனைவி கவிதா கண்ணீர் மல்க பேசினார்.
என் கணவர் சர்க்கரை வியாதி, இதய நோய், இரண்டு கிட்னிகளும் செயலிழப்பு என உடல் முழுவதும் பல வியாதிகளால் அவதிப்பட்டு வருகிறார். நடக்க கூட முடியாமல் ஒவ்வொரு நாளையும் கழிக்கிறார். மருத்துவர்கள் 6 மாதம் தான் இவர் உயிரோடு இருப்பார் என்று கை விரித்துவிட்டனர். அவர் உயிருடன் இருக்கும் வரை பார்த்து கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் ஹரி வைரவன் யாருக்கும் கஷ்டம் கொடுக்கக்கூடாது எனக்கருதி என்னிடம், கருணை கொலை செய்ய சொல்லி கேட்டார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ‘வெண்ணிலா கபடி குழு’ நடிகரின் இந்த பரிதாப நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இவர் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.