வார்த்தை இல்லை..இப்போதான் மூச்சுவிட முடியுது - சல்மான் ருஷ்டி குறித்து முன்னாள் மனைவி தகவல்
சல்மான் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார்.
சல்மான் ருஷ்டி
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75) மீது நேற்று முன்தினம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.
இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
முன்னாள் மனைவி
முதலில் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர் ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுள்ள நிலையில், ருஷ்டியின் முன்னாள் மனைவியும், தொலைக்காட்சி பிரபலமுமான பத்ம லக்ஷ்மி ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
Relieved @SalmanRushdie is pulling through after Friday’s nightmare. Worried and wordless, can finally exhale. Now hoping for swift healing.
— Padma Lakshmi (@PadmaLakshmi) August 14, 2022
“ஆகஸ்ட் 12ஆம் நாள் அன்றைய மோசமான இரவுக்குப் பிறகு சல்மான் ருஷ்டி தேறி வருகிறார். வார்த்தைகள் இல்லை, கவலையில் இருந்து மீண்டு நிம்மதியாக தற்போது நிம்மதியாக மூச்சு விட முடிகிறது.
உடல்நிலையில் முன்னேற்றம்
விரைவில் அவர் குணமடைவார் என நம்புகிறேன்” என ட்வீட் செய்துள்ளார். சென்னையை பூர்விகமாகக் கொண்ட பத்ம லக்ஷ்மி, கடந்த 2004ஆம் ஆண்டு சல்மான் ருஷ்டியை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது இருவரும் நட்புறவுடன் தங்கள் உறவைத் தொடர்ந்து வருகின்றனர்.