கண் பார்வையை இழந்த சல்மான் ருஷ்டி - வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை!

Attempted Murder United States of America Crime
By Sumathi Aug 14, 2022 04:39 AM GMT
Report

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தி குத்துக்கு ஆளான பிறகு, ஒரு கண்ணை இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 சல்மான் ருஷ்டி

இந்திய வம்சாவளியான எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, சிறுவயதிலேயே இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் குடியேறியவர். உலக அளவில் இலக்கியத்தில் புகழ்பெற்ற சலமான் ருஷ்டி, புக்கர் விருதை வென்றவர்.

கண் பார்வையை இழந்த சல்மான் ருஷ்டி - வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை! | Writer Salman Rushdie Lost An Eye Sight

இவர் 1980 களில் எழுதிய சாத்தானின் வேதங்கள் என்கிற நூல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நூலில் இஸ்லாமுக்கு எதிரான விஷயங்கள் இடம்பெற்று இருந்ததாக சொல்லி அவருக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடந்தன.

கொடூர தாக்குதல் 

அவருக்கு பலரும் கொலை மிரட்டல் விடுத்தனர், அத்துடன் அவரது புத்தகத்திற்கு ஈரான் நாட்டில் தடை விதித்தனர். 2012ம் ஆண்டிலேயே சல்மான் ருஷ்டியை கொலை செய்பவர்களுக்கு ரூபாய் 18.5 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று ஈரான் மதவாத அமைப்பு அறிவித்தது.

கண் பார்வையை இழந்த சல்மான் ருஷ்டி - வெண்டிலேட்டரில் தீவிர சிகிச்சை! | Writer Salman Rushdie Lost An Eye Sight

இதனால் பல ஆண்டுகளாக பதுங்கி , தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அவர் மீது இன்று கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர்,

தீவிர சிகிச்சை

மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது பார்வையாளர் வரிசையில் இருந்தவர் திடீரென்று மேடையில் ஏறி சல்மான் ருஷ்டியை சரமாரியாக கத்தியால் குத்தினார். கழுத்து, மார்பு மற்றும் வயிறு என 15 கத்தி குத்துகள் விழுந்த நிலையில், நிலை தடுமாறி ருஷ்டி கிழே சரிந்து விழுந்தார்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் நியூயார்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பார்வை இழப்பு

தாக்குதலில் சல்மான் ருஷ்டியின் கண்ணுக்கு செல்லவேண்டிய நரம்பு பாதிப்பு அடைந்துள்ளதால் ஒரு கண்ணில் அவர் பார்வை இழந்துள்ளதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நியூஜெர்ச்சியை சேர்ந்த 24 வயதான ஹதிமட்டர் என்பவரை காவல்துறையினர், மேடையிலேயே மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.