மேடையில் பேசிக் கொண்டிருந்த பிரபல எழுத்தாளருக்கு கத்திக்குத்து

United States of America
By Thahir Aug 13, 2022 04:49 AM GMT
Report

அமெரிக்காவில் உரையாற்றி கொண்டிருந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளருக்கு கத்தி குத்து 

உலகின் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வெளியில் சௌதாகுவா இன்ஸ்டிடியூட்டில் நேற்று உரையாற்ற சென்று இருந்தார்.

அமெரிக்க நேரப்படி காலை 11 மணிக்கு அவரிடம் மேடையில் ஒருவர் நேர்காணல் நடத்திக்கொண்டிருந்தார். ஆயிரக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.

நேர்காணல் நடந்துகொண்டிருந்த போது சல்மான் ருஷ்டி தன்னை பற்றி அறிமுகம் செய்து கொண்டிருந்தார். அந்நேரம் மேடையிக்கு வந்த கறுப்பு சட்டை மற்றும் கறுப்பு மாஸ்க் அணிந்த நபர் சல்மான் ருஷ்டியிடம் வாக்குவாதம் செய்தார்.

அதோடு யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னிடம் இருந்த கத்தியால் சல்மான் ருஷ்டியின் கழுத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக குத்தினார். சில நொடிகளில் பல முறை அந்த நபர் கழுத்தில் குத்தினார்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த பிரபல எழுத்தாளருக்கு கத்திக்குத்து | Writer Salman Rushdie Stabbed

இதனால் சல்மான் ருஷ்டி ரத்த வெள்ளத்தில் மேடையில் சரிந்து விழுந்தார். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தீவிர சிகிச்சை

தொடர்ந்து சல்மான் ருஷ்டிக்கு அங்கு இருந்தவர்கள் ஓடி வந்து முதலுதவி செய்தனர். உடனடியாக அவர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை தாக்கிய நபர் உடனே கைது செய்யப்பட்டார்.

மேடையில் பேசிக் கொண்டிருந்த பிரபல எழுத்தாளருக்கு கத்திக்குத்து | Writer Salman Rushdie Stabbed

என்ன காரணத்திற்காக அந்த நபர் இத்தாக்குதலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சல்மான் ருஷ்டியிடம் நேர்காணல் நடத்தியவருக்கும் தலையில் லேசாக காயம் ஏற்பட்டது. தாக்குதல் நடந்த கூட்டத்தில் 2,500 பேர் கலந்து கொண்டிருந்தனர்.

இத்தாக்குதலை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவருக்கு பல இடங்களில் காயம் இருந்ததாக சிகிச்சையளிக்கும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.