நயன்தாராவை நடிக்க வச்சுருக்கவே கூடாது; இப்படி நடந்துருச்சு - தனுஷ் பட இயக்குநர் பளீச்!
நடிகை நயன்தாரா குறித்து இயக்குநர் சேகர் கம்முலா பேசியுள்ளார்.
நீ எங்கே என் அன்பே
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் 'நீ எங்கே என் அன்பே' (அனாமிகா). இந்த படத்தில் நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் உள்ளிட்டோர் நடித்தனர்.

ஆனால், இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த படம் இந்தியில் வெளியான 'கஹானி' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'நீ எங்கே என் அன்பே' படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சேகர் கம்முலா "அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்று முதலில் நினைத்தேன்.
தவறான முடிவு
பின்னர், பெண்களை மையமாக கொண்ட படத்தை இயக்க வேண்டும் என்று விரும்பியதால் இதனை இயக்கினேன். அந்த நேரத்தில் தனக்கு நல்ல கதை இல்லாததால், பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தேன்.

இதனால், இப்படத்தில் நயன்தாரா போன்ற முன்னணி நடிகை நடித்தால் நல்ல வரவேற்பை பெறும் என நம்பினேன். ஆனால், இப்படம் சரியாக அமையவில்லை. இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்திருக்கக்கூடாது. அவரை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு" என்று தெரிவித்துள்ளார். சேகர் கம்முலா தற்போது தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க IBC Tamil