விக்ரமுக்கு சுத்தமா நடிக்கவே தெரியாது; ஆனால் அதை மட்டும் செய்வார் - தேவயானி கணவர் பகீர்!

Vikram Tamil Cinema
By Sumathi Jan 09, 2024 05:30 PM GMT
Report

நடிகர் விக்ரமிற்கு நடிக்கவே தெரியாது என இயக்குநர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறிவிடும் வல்லமை கொண்டவர். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடைசியாக பொன்னியின் செல்வன் 2 படத்தில் மிரட்டியிருந்தார்.

actor vikram

தற்போது, அவர் நடிப்பில் ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படம் வெளியாகவுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

காதலியுடன் இவ்வளவு மோசமாக நடந்துக்க மாட்டேன் - துருவ் விக்ரம் பளீச்!

காதலியுடன் இவ்வளவு மோசமாக நடந்துக்க மாட்டேன் - துருவ் விக்ரம் பளீச்!

இயக்குநர் விமர்சனம்

இந்நிலையில், இயக்குநரும் நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரன், விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் விக்ரமிற்கு பிடிக்கவில்லை என சொல்லியிருக்கிறார். விக்ரமை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு போய் சேர்த்ததே அந்த படம்தான். கையை ஒடித்துக்கொண்டு, காலை ஒடித்துக்கொண்டு, கண்ணை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு நடிப்பது எல்லாம் நடிப்பு இல்லை.

director rajakumaran

இருக்கும் க்ளோசப்பில் எதுவுமே இல்லாமல் கட் சொல்லும்வரை நடிக்க வேண்டும். அவர்தான் நடிகர். விக்ரமால் அப்படி நடிக்கவே முடியாது. அவருக்கு ஒரு நடிப்பும் தெரியாது. மீசையை எடுத்துக்கொண்டு, மொட்டை அடித்துக்கொண்டு, காலை உடைத்துக்கொண்டு, கையை உடைத்துக்கொண்டு நடந்து போக சொன்னால் நடந்து போவார்.

நின்ன இடத்தில் கட் சொல்லும் வரைக்கும் ஒரு நடிகராக என்ன ரியாக்‌ஷன் என்ன கொடுக்க வேண்டும் என்று விக்ரமுக்கு சுத்தமாக தெரியாது. எனது படத்தில் அவருக்கு அப்படியொரு பிரச்னை இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.