காதலியுடன் இவ்வளவு மோசமாக நடந்துக்க மாட்டேன் - துருவ் விக்ரம் பளீச்!
நடிகர் துருவ் விக்ரம் காதல் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் துருவ் விக்ரம்
பிரபல நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமானார். 2020ல் ‘மகான்’ திரைப்படம் வெளியானது. அதன்பின், அவர் நடிப்பில் 2 வருடங்களாக எந்தப் படமும் வெளியாகவில்லை.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஸ்போர்ஸ் - ட்ராமா படம் ஒன்றில் நடிக்கிறார். ‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் பாபுவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியது. சில படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.
காதல்?
முன்னதாக துருவ் விக்ரமுடன் நடிகை பிரியா ஆனந்த் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது, ஆதித்ய வர்மா படத்தில் உங்கள் காதலியுடன் சண்டை போடுவது போல நிஜத்திலும் உங்கள் காதலியுடன் சண்டை போட்டு இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.

அதற்கு, அவர் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. எனக்கு காதலி யாரும் கிடையாது.
எனவே அவர்களுடன் சண்டை போடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என கூறினார். அப்படியே காதல் இருந்தாலும் இந்த அளவுக்கு மோசமாக சண்டை போட மாட்டேன். என்னுடைய அக்கா மற்றும் நண்பர்களிடம் இப்படியான சண்டை எல்லாம் நடந்து இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
திருமலையில் வெள்ளை வானில் இரண்டு தமிழ் பெண்கள் கடத்தி படுகொலை : மேலும் 03 கடற்படையினர் கைது IBC Tamil
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil