உதவி இயக்குநர் To தேவயானி கணவர் - இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி தெரியுமா?
நடிகை தேவயானி மற்றும் கணவர் ராஜகுமாரனின் காதல் மலர்ந்த கதை.
தேவயானி-ராஜகுமாரன்
தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருந்தவர் நடிகை தேவயானி. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளட்ட மொழிப்படங்களில் நடித்து வந்தார் தேவயானி. அப்போது உதவி இயக்குநராக திரையுலகிற்கு வந்தவர்தான் இயக்குநர் ராஜகுமாரன்.

இவர் சூர்யவம்சம் திரைப்படத்தில் விக்ரமனிடம், உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அந்த படத்தில் கதாநாயகி தேவயானி. ராஜகுமாரன் தேவயானிக்கு வசனங்கள் சொல்லிக்கொடுக்கும் வேலையில் இருந்துள்ளார். தேவயானிக்கு தமிழ் உச்சரிப்பு, நடிப்பு, வசனம் ஆகியவற்றை சொல்லிக் கொடுத்திருக்கார் ராஜகுமாரன். அப்போது தேவயானி "நீங்கள் முதல் படம் இயக்கும்போது, அதில் நான் கதை கேட்காமல் நடிப்பேன்' என்று ராஜகுமாரனிடம் கூறியிருக்கிறார்.

அந்தளவுக்கு ராஜகுமாரன் தேவயானிக்கு ஒரு நம்பிக்கையான ஆளாக மாறியிருந்தார். இதைத் தொடர்ந்து ராஜகுமாரன், தனது முதல் படமான நீ வருவாய் என என்ற படத்திற்கு தயாரிப்பாளரை பிடித்துவிட்டு தேவயானியை பார்க்க சென்றுள்ளார். அவரை பார்த்த உடனே படம் ஓகே ஆகிவிட்டது தானே? என குழந்தைப் போல் சந்தோஷப்பட்டு சிரித்தாராம் தேவயானி.

இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் தேவயானி நடித்தார். படமும் ஹிட் அடித்தது. தேவயானிக்கு , ராஜகுமாரனின் மீது அதிக பாசம் வந்துள்ளது. ராஜகுமாரனின் அடுத்த படமான விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற படத்திலும் ஹீரோயினாக தேவயானி நடித்தார். இதற்கிடையில் யதார்த்தமாக ஒரு சேலையினை தேவயானிக்கு வாங்கி கொடுத்துள்ளார் ராஜகுமாரன்.
காதல் திருமணம்
அதன் பிறகு தேவயானி ராஜகுமானிடம் 'நம்மைப் பற்றி பலரும் பலவாறு கிசுகிசுக்கின்றனர் எனக்கூறியுள்ளார். ஆனால் ராஜகுமாரன் அதை கண்டுகொள்ளவில்லையாம். பின் வெளிப்படையாக தன் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

அதன்பின் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. தனது குடும்பத்தினரிடம் தன் காதலை வெளிப்படையாக சொல்லிவிட்டார், தேவயானிஆனால், கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ராஜகுமாரன் வீட்டில் எதிர்ப்பு இல்லை. இதனால் வீட்டைவிட்டு வெளியேறிய தேவயானி, ராஜகுமாரனுடன் சென்றுள்ளார். இருவரும் திருத்தணியில் ரகசிய திருமணம் ஷைத்யுகொண்டனர். இதில், ராஜகுமாரன் யதார்த்தமாக வாங்கிக்கொடுத்த அந்த சேலையைத்தான் தேவயானி திருமணத்தன்று உடுத்தியுள்ளார்.

2001ஆம் ஆண்டு, திருமணம் முடித்தாலும் ராஜகுமாரனுக்கு இயக்குநராக சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் திருமணமானதும் தேவயானியின் மார்க்கெட்டும் இறங்க ஆரம்பித்தது. இந்நிலையில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தேவயானி கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும் பயன்படுத்திக்கொண்டார். சீரியலிலும் நடித்து முன்னேறியுள்ளார் தேவயானி.
இயக்குனராக சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கணவரை கை விடவில்லை தேவயானி. தற்போது ராஜகுமாரன்- தேவயானி தம்பதியினர் 22 ஆண்டுகளைக் கடந்து அதே அன்புடன், அதே காதலுடன் ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.