காதலியா கூட நினைக்கலாம்; என்ன தப்பு? அவர் அப்படித்தான் - த்ரிஷா குறித்து மிஷ்கின்!
த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு மிஷ்கின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா
சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஏ.கே.ராஜு. அண்மையில் த்ரிஷா குறித்து அவதூறு பேசி கண்டனங்களைப் பெற்றார். தொடர்ந்து த்ரிஷாவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், ல் இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நடிகைகளை இப்படி பேசுவது முற்றிலும் தவறு. அவர்கள் இந்த நடிப்பை தங்கள் கடவுளாக நினைத்தே இந்த சினிமாவிற்குள் வந்திருக்கிறார்கள். உங்கள் வீட்டு பெண்மணியாக இருந்தால் இப்படி பேசுவீர்களா?
மிஷ்கின் வருத்தம்
ஒரு செய்தி போடவேண்டும் என்பதற்காக நடிகையை அதுவும் அவர் ஒரு தாய் அல்லது பெண். ஒரு பெண்ணை பற்றி இப்படி பேசாதீர்கள். தயவு செய்து இப்படி பேசாதீர்கள். பத்திரிக்கைகளிலும் இப்படி எழுத வேண்டாம். நான் மிகவும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். ஒரு நடிகையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?
இந்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தை அளித்தது. மற்றும் உங்கள் மகளாக நினைக்க வேண்டும். தங்கையாக நினைக்க வேண்டும். ஏன் காதலியாகக் கூட நினைக்கலாம். அதில் தவறு இல்லை. ஆனால் அந்த காதலிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். அதனால் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். பெண்ணை அழ வைப்பது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா?
த்ரிஷாவை நான் இரண்டு முறை பார்த்து பேசியிருக்கிறேன். மிகவும் எளிமையான பெண். நல்ல முறையில் பழக கூடிய பெண். அதனால் இனிமேல் இப்படிப்பட்ட செய்திகளை தவிர்க்க வேண்டும். தேவையற்ற முறையில் பேசவும் வேண்டாம் என வருத்தம் தெரிவித்துள்ளார்.