பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் த்ரிஷா - மனதுக்கு பிடித்த நபருடன் குட்நியூஸ்!
த்ரிஷாவிற்கு 13 வருடங்களுக்கு பிறகு ஒரு சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2010ல் வெளியான கட்டா மீத்தா என்னும் படத்தில் நடித்து பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.
ரீ-என்ட்ரி
அதன்பின் தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கும் பாலிவுட் திரைப்படமாக தி புல் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில்தான் நடிகை த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கரண் ஜோஹர் தயாரிக்க, சல்மான் கானுடன் ஜோடியாகவுள்ளார்.

நடிகை த்ரிஷா அவருக்கு பிடித்த பாலிவுட் ஹீரோ என்று கேட்டாலே சல்மான் கானின் பெயரை தான் சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு பாலிவுட் சினிமாவில் த்ரிஷா களமிறங்குகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan