மனைவியுடன் புது வீட்டில் குடிபுகுந்த விஜய் - வைரலாகும் ஃபோட்டோஸ்!
இயக்குநர் ஏ.எல். விஜய் தன் மனைவியுடன் புதிய வீட்டில் குடிபுகுந்துள்ளார்.
ஏ.எல். விஜய்
கிரீடம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். மதராசப்பட்டினம், தலைவா போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தொடர்ந்து, நடிகை அமலாபாலை திருமணம் செய்தார்.
பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். 2019ல் ஐஸ்வர்யா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
புதுமனை புகுவிழா
இறுதியாக ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். இந்நிலையில், இவர் புது வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இதன் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அந்தப் பூஜையில் நடிகர் ஆர்யா, தனது மனைவி, மகளோடு கலந்து கொண்டார்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் அமலா பால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர் ஜெகத் தேசாய் என்பவரை திருமணம் செய்தார். தற்போது ஹனிமூன் சென்றுள்ள அமலா பால், தனது கணவருடன் ரொமான்ஸ் செய்து வரும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
You May Like This Video