என் வாழ்க்கையில் மனநிம்மதியே இல்லை.. சோகத்தில் அமலாபால்
மைனா படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த நடிகை அமலா பால், தெய்வத்திருமகள், தலைவா, பசங்க 2, அம்மா கணக்கு என்று பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அமலாபால்
இதற்கு இடையே பல தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும், ஆடை படத்தின் மூலம் அனைவரையும் அசர வைத்தார். சமீபகாலமாகவே ட்ரெண்டிங் லிஸ்டில் இருந்து விலகிய நடிகை அமலா பால், சமூக வலைதளங்களில் மட்டும் பிஸியாக இருந்து வந்தார்
தற்போது அமலாபால் நடிப்பில் வெளிவந்துள்ள விக்டிம் ஆன்தாலஜி தொடர் மூலம் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். நடிகர்கள் பிரசன்னா, அமலாபால், கிரிஷ் நடித்திருந்த இந்த ஆன்தாலஜி தொடரில் அமலாபால் நடித்த கன்ஃபஷன் பாகத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. பிரபலமாக இருக்கக்கூடிய நடிகை அமலாபால் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மட்டும் ஆக்டிவாக இருக்கிறார்.
நடிப்பை விட்டு விடலாம்
நடிப்பை விட்டு விடலாம் என்று நினைத்ததாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து நடிகை அமலாபால் கூறுகையில்," உண்மையில் 2020 ஆம் ஆண்டு முதல் நான் நடிப்பை விட்டு விடலாம் என்று நினைத்தேன், எனது அம்மாவிடத்திலும் நடிப்பை விட போவதாக கூறிவிட்டேன்.
என் வாழ்க்கையிலும் சரி, நடிப்பிலும் சரி, பல ஏமாற்றம் இருந்ததால், நடிப்பில் இருந்து விலக யோசித்தேன்" என்று கூறியுள்ளார், தனது 17 வது வயதிலிருந்து வேலை செய்து வரும் நடிகை அமலா பால் நடுவே கொஞ்சம் பிரேக் எடுக்க வேண்டும் என்று பல நாள் நினைத்துள்ளாராம்
அப்பாவின் மரணம், கொரோனா லாக் டவுன், என்று அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்தவுடன் வேறு வழி இல்லாமல் இரண்டு வருடங்கள் அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இப்பொழுது மீண்டும் பிறந்தது போல் நான் உணர்கிறேன், என்று அமலா பால் உருக்கமாக கூறியுள்ளார்.