கடைசியில் ரச்சிதா குறித்த ரகசியத்தை உடைத்த தினேஷ் - இனி இதுதான் முடிவு!
ரச்சிதா குறித்து கணவர் தினேஷ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ரச்சிதா-தினேஷ்
சின்னத்திரை தம்பதிகளான ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து இருக்கின்றனர்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்துக் கொண்டார். அதில் பல மறைமுக பாசிட்டிவ் தகவல்களை ரச்சிதாவிற்கு கொடுத்து வந்தார்.
அடுத்த வாழ்க்கை..
அதே சமயம், ரச்சிதா அவரது பிரிவு முடிவில் இருந்து மாறுவதாக இல்லை என உறுதியாக இருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தினேஷ், நான் உள்ளே போகும்போது எப்படியாவது என்னுடைய வாழ்க்கை சரியாகிவிடும் என்று தான் நினைத்திருந்தேன்.
டைட்டில் ஜெயித்து நம்ம வாழ்க்கையை மீண்டும் தொடரலாம் என்று நான் ஆசையோடு உள்ளே போனேன். ஆனால் வெளியே வந்து பார்த்தால் எந்த இடத்தில் இருந்ததோ அந்த மாதிரி தான் இருக்கிறது. இதற்கு மேலும் ரச்சிதா மனம் மாறுவார் என்று சொல்ல முடியவில்லை.
ரச்சிதா ஒரு சுவற்றை எழுப்பி அந்த சுவற்றுக்குள்ளேயே இருந்து கொண்டிருக்கிறார். அது என்னால் உடைக்க முடியாத வகையில் வலுவாகி கொண்டே இருக்கிறது. இதற்கு மேலே இனி நான் அடுத்த வாழ்க்கையை நோக்கி பயணத்தை தொடர போகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.