நேரம் வரும்போது செத்துரனும்.. என் வாழ்க்கையை வாழ விடுங்க - ரச்சிதா உருக்கம்!
தினேஷ் - ரச்சிதா
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடிகளாக இருந்தவர்கள் தினேஷ் - ரச்சிதா மஹாலக்ஷ்மி ஜோடி. ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்று வளம் வந்த இந்த ஜோடி ஏதோ ஒரு காரணத்தால், திடீரென பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது வரை இருவரின் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், தினேஷ் மீண்டும் தான் ரச்சிதாவுடன் இணைத்து வாழ பல தருணங்களில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், ரச்சிதா தரப்பில் இதற்கு எந்த வித சுமுகமான பதில் கிடைத்தவராக தெரியவில்லை
இன்ஸ்டா ஸ்டோரி
தற்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள தினேஷை அவரின் பெற்றோர்கள் உள்ளே சென்று சந்தித்து சில அறிவுரைகளை கூறி வந்தனர். இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளது ஒன்று வைரலாகி வருகிறது.
அதில் "சாகும் நேரம் வரும் போது செத்துவிட வேண்டும் என்று நினைக்கும் நபர்களில் நானும் ஒருத்தி. என் வாழ்க்கையை நான் நினைக்கும்படி வாழ விடுங்கள்' என்று ரச்சிதா பதிவிட்டுள்ளார்.