எதிர்பார்க்கவே இல்லையே..! அதிர்ச்சி முடிவெடுத்த இந்திய வீரர் - ரசிகர்கள் சோகம்!

Cricket Indian Cricket Team Dinesh Karthik Sports
By Jiyath Mar 08, 2024 11:24 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் கடந்த 2004-ம் ஆண்டுமுதல் விளையாடி வருபவர் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

எதிர்பார்க்கவே இல்லையே..! அதிர்ச்சி முடிவெடுத்த இந்திய வீரர் - ரசிகர்கள் சோகம்! | Dinesh Karthik Bids Farewell To Cricket

மேலும் ஐ.பி.எல்லில் தற்போது பெங்களூரு அணிக்கான விளையாடி வருகிறார். இதுவரை 242 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 20 அரைசதத்துடன் 4,516 ரன்கள் எடுத்துள்ளார். அத்துடன் 141 கேட்ச் மற்றும் 36 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.

500-வது விக்கெட் வீழ்த்திய நாள்; ஐசியூவில் அம்மா.. உடைந்த அஸ்வின் - மனைவி பேட்டி!

500-வது விக்கெட் வீழ்த்திய நாள்; ஐசியூவில் அம்மா.. உடைந்த அஸ்வின் - மனைவி பேட்டி!

கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு?

இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருடன் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்பார்க்கவே இல்லையே..! அதிர்ச்சி முடிவெடுத்த இந்திய வீரர் - ரசிகர்கள் சோகம்! | Dinesh Karthik Bids Farewell To Cricket

கடந்த 2022-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற உள்ளதாக வெளியான தாவல் அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.