என் மனைவிக்காகத் தான் அதை செய்தேன் - பிக்பாஸில் தினேஷ் வெளிப்படை!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மனைவி குறித்து தினேஷ் கூறிய தகவல் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் 7
விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்துவிட்டதாக கூறிய நிலையில்,
தினேஷ் பேச்சு
தற்போது பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் தினேஷ் கலந்துக்கொண்டுள்ளார். இந்நிலையில், நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் பிரதீப் இதற்கு முன்னாள் பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என கேட்டதற்கு,
பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை. போன சீசனில் என்னுடைய மனைவி கலந்து கொண்டார் அவருக்காக பார்த்தேன் என தினேஷ் தெரிவித்துள்ளார்.