எனக்கு நீ..உனக்கு நான்; பிக்பாஸ் வீட்டிற்குள் கணவர் - ரச்சிதா போட்ட பதிவை பாருங்க!

Sumathi
in பிரபலங்கள்Report this article
நடிகை ரச்சிதா பகிர்ந்துள்ள பதிவு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
நடிகை ரச்சிதா
விஜய் டிவியின் ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலெட்சுமி. அதே தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013ல் திருமணம் செய்துக்கொண்டார்.
சமீபத்தில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனி தனியே வாழ்ந்து வந்தனர். அதன்பின், ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். தொடர்ந்து, அவ்வபோது ஃபோட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்த வண்ணம் உள்ளார்.
உருக்கமான பதிவு
அண்மையில் அவரது தந்தை காலமானார். இதனால் ரச்சிதா மன வேதனயில் உள்ளார். தற்போது, கணவர் தினேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார்.
இந்நிலையில், ரச்சிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்துக்கு முன்பு தன் தாயின் கையை பிடித்துக்கொண்டு நிற்கிறார்.
மேலும் அதற்கு, எனக்கு நீ உனக்கு நான் என்று கேப்ஷனும் போட்டு பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், தன்னுடைய வாழ்க்கையில் தினேஷுக்கு இடம் இல்லை என்பதைத்தான் மறைமுகமாக சொல்கிறாரா என கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.