எனக்கு இந்த ஹார்மோன் பிரச்சனை இருக்கு.. அதனால தான் இப்படி இருக்கேன் - ரச்சிதா வெளிப்படை!
நடிகை ரச்சிதா தனக்கு உடம்பில் உள்ள பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர்.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், இவர் தனது உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், "சில பேருக்கு சாப்பிட்டால் தான் உடல் எடை கூடும்.. நானெல்லாம் மோந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும். அப்படியான ஹார்மோன் பிரச்சனை எனக்கு இருக்கிறது. ஒரு நடிகையாக உடல் எடையை பராமரிப்பது என்பது எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும்.

அப்படி இருக்கும் பொழுது என்னுடைய உடல் எடை கூடிவிடவே கூடாது என்பதில் நான் மிகவும் கவனமுடன் இருக்கிறேன். மருத்துவரை பார்க்கச் சென்றால் நீங்கள் சாப்பிடவே வேண்டாம் ஒரு உணவை முகர்ந்து பார்த்தாலே போதும் உங்களுக்கு உடல் எடையை கூடிவிடும்..
சாப்பிடவே வேண்டாம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தாலே உடல் எடை கூடி விடுவீர்கள்… உப்பி போய்விடுவார்கள் என்று கூறியிருக்கிறார். நான் உப்பி விடக்கூடாது என்பதற்காக என்னுடைய உணவு முறையில் கடுமையான கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
அதிகரித்துச் செல்லும் பணவீக்கம் : அரசாங்கத்திடம் எந்த தீர்வும் இல்லை : முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு IBC Tamil