சேலையில வீடு கட்டவா.. இல்ல, புடவைக்குனே ஒரு வீடு இருக்கு - நடிகை ரச்சிதா பேட்டி!
நடிகை ரச்சிதா தனது சேலைகளுக்காக மாட்டும் தனி வீடே வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ரச்சிதா மகாலட்சுமி
பிரபல சின்னத்திரை நடிகையான ரச்சிதா மகாலட்சுமி தமிழில் பல ஹிட்டான சீரியல்களில் நடித்துள்ளார். இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர், இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் மீனாட்சியாக நடித்து பல ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தனது முதல் சீரியலில் கதாநாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்கள் ஏதோ காரணத்தால் பிரிந்துவிட்டனர்.
புடவை
இந்நிலையில், இவர் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் உங்களிடம் ஒரு 1000 சேலை இருக்குமா? என்று கேட்டனர். அப்பொழுது அவர், "இல்லை. இல்லை. 5000 சேலைகளை வைத்திருக்கிறேன். அதற்காக பெங்களூரில் 3 படுக்கையறை கொண்ட வீட்டை வாங்கியுள்ளேன். அதில் வைத்திருக்கும் சேலைகள் எல்லாம் மிகவும் விலையுயர்ந்த சேலைகள்.
பெரும்பாலும் காட்டன் சேலைகளைத்தான் விரும்புவேன். ஒரே ஒரு சேலை மட்டும்தான் ஒரு லட்சத்து 25ஆயிரம் ரூபாய். சேலை யாருக்காவது பிடிக்கும் என்றால் உடனே அதை ஆன் லைனில் விற்பனை செய்து விடுவேன்" என்றார். இதை பார்த்த ரசிகர்கள் எவ்ளவோ பிரச்சினைகள் இருக்கும் போது இதெல்லாம் இப்போ தேவைதானா? என்று கமெண்ட்டில் கூறிவருகிறார்கள்.