குழந்தையை தத்தெடுக்கப்போகும் ரச்சிதா? கோர்ட் தீர்ப்பில் சூசகம்!
நடிகை ரச்சிதா நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றை குறித்து பகிர்ந்த தகவல் கவனம் பெற்றுள்ளது.
நடிகை ரச்சிதா
சின்னத்திரை நடிகை ரசித்தா விஜய் டிவியின் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, அந்த தொடரில் நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீப காலமாக இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது கூட அவரின் கணவர் குறித்து எதுவும் கூறவில்லை. ஆனாலும் தினேஷ் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக போஸ்ட்களை போட்டு வந்தார். அதற்கும் அவர் எந்தவித பதிலும் கூறவில்லை.
நீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற தீர்ப்பை வரவேற்று இதுபோதும்.. இனி இதிலிருந்து பார்த்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவர் குழந்தையை தத்தெடுக்கும் முடிவில் எதும் இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமனிடம் பேசிய ரச்சிதா, தனக்கு 35 வயதில் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.