ஜெயலலிதாவுக்கான மருத்துவ சிகிச்சையை சசிகலா தடுத்தாரா? - வெளியான திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
4 பேர் குற்றவாளிகள்?
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அறிக்கையில் சசிகலா, டாக்டர் கே.எஸ்.சிவக்குமார், அப்போது சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு,
ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆணையத்தின் அறிக்கையில் அப்பல்லோ மருத்துவக் குழு ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவில்லை.
மரண அறிவிப்பு தாமதம் ஏன்?
2012 ஆம் ஆண்டு முதல் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் சுமூக உறவு இல்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இறந்த நாள் மற்றும் நேரத்தில் முரண்பாடு உள்ளது. சாட்சியங்கள் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள். 2016 டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருந்தது.
ஜெயலலிதா 4ம் தேதி மதியம் 3 மணிக்குள் இறந்துள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஆனால் 5 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்தார் என அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மரணமடைந்த செய்தியை அறிவிப்பதில் ஏன் தாமதன் என்ற கேள்வி எழுந்துள்ளது.