செக் வைத்த ஆறுமுகசாமி ஆணையம் : விசாரணை வளையத்தில் சசிகலா விஜயபாஸ்கர்?

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai Oct 18, 2022 06:08 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை

அறிக்கையில் சசிகலா, டாக்டர். கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்யப்பட்டு.

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என கூறப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையின் விபரம் :

இதில் சசிகலாவை குற்றம் செய்தவராக கருதி விசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சசிகலாவை குற்றம் சாற்றுவதை தவிர வேறு வழியே இல்லை. ஜெயலலிதா மயக்கம் அடைந்த பின் நடந்தது எல்லாம் ரகசியமாக உள்ளது.

சசிகலா உட்பட 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும். சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர். அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

செக் வைத்த ஆறுமுகசாமி ஆணையம் : விசாரணை வளையத்தில் சசிகலா விஜயபாஸ்கர்? | Sasikala Should Be Wrong Says Arumugasami

இந்த அறிக்கையில், 2012-க்குப் பிறகு ஜெ- சசிகலா இடையே சுமூகமான உறவு இல்லை. ஜெயலலிதா மயக்கத்துக்குப் பிந்தைய நிகழ்வுகள் ரகசியமாக்கப்பட்டுவிட்டன

சசிகலா ஜெயலலிதா உறவில் விரிசல்

ஜெ. டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என பொய்யான அறிக்கையை வெளியிட்டனர். ஜெயலலிதாவுடன் சசிகலா மீண்டும் இணைந்த பிறகு இருவருக்கும் சுமூக உறவு இல்லை 

பிரிவிற்கு பின் இவர்கள் சேர்ந்த போது அவர்களிடம் சுமுகமான உறவு இல்லை. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சையே அளிக்கவில்லை. ஜெயலலிதா இறந்த நேரத்திலும் முரண்பாடு என ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலக்குறைவு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்த தவறி உள்ளனர்.

முழுமையாக ஆராயாமல் வழங்கிய எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கையை ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் ஏற்கவில்லை, என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டு உள்ளது.