Diwali: சுகர் பற்றி கவலைப்படாம ஸ்வீட் சாப்பிடுங்க.. ஆனால் இதை மட்டும் மறந்துராதீங்க!
சர்க்கரை நோயாளிகள், பண்டிகை நாள்களில்கூட இனிப்பே சாப்பிடக்கூடாதா என்ற கேள்வி பலருக்கும் உண்டு.
Diwali
அப்படிப்பட்ட நாள்களில் நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் உணவை, அது சாதமோ, சப்பாத்தியோ, அதன் அளவை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துக்கொண்டு, கூடவே நிறைய காய்கறிகள் வைத்துச் சாப்பிடுவதோடு, ஆசைக்கு ஒரு துண்டு ஸ்வீட்டும் சாப்பிடலாம்.
நீங்கள் எடுத்துக்கொள்ளும் கார்போஹைட்ரேட் அளவு குறைவாகவும் நார்ச்சத்தின் அளவு அதிகமாகவும் இருக்க வேண்டும். ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், இனிப்பு சாப்பிட விரும்புவோர், வீட்டில் தயாரிக்கும் இனிப்புகளை மட்டும் சாப்பிடலாம்.
இனிப்பு சாப்பிடலாமா?
கடைகளில் வாங்குவதையோ, கல்யாண வீடுகளில் பரிமாறப்படுவதையோ சாப்பிடுவதை தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு ஒரு இனிப்பு மட்டும் சாப்பிடுங்கள். பகலில் பாதி, இரவில் பாதி இனிப்பு சாப்பிடலாம். வசதியாக அமர்ந்து இனிப்புகளை உண்ணுங்கள்.
இதன் மூலம் நீங்கள் உங்கள் உணவை மென்று சாப்பிடுவதன் மூலம் அதன் முழு ஊட்டத்தையும் சுவையையும் பெற முடியும். இந்த வழியில் நீங்கள் இனிப்புகளை குறைந்த அளவில் சாப்பிடுவீர்கள்.